(UTV|COLOMBO) – ஐ. எஸ். ஐ .எஸ். இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல் பக்தாதியின் சகோதரி ரஸ்மியா அவாத் (Rasmiya Awad) சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
மேலும், அவரும் அவரது கணவர் மற்றும் மருமகளும் இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு சிரிய நகரமான ஆசாஸ் அருகே நேற்று(04) முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே அல் பக்தாதியின் சகோதரியான 65 வயதான ரஸ்மியா அவாத் கைது செய்யப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐ. எஸ். ஐ. எஸ். இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்த புலனாய்வுத் தகவல்களை பக்தாதியின் சகோதரியிடமிருந்து விசாரணைகள் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமென துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அபூபக்கர் அல்-பக்தாதியின் சகோதரி பற்றி எவ்வித தகவலும் தெரியவராத நிலையில், அவர் தீவிரவாதக் குழுவுடன் தொடர்புபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக துருக்கி அதிகாரி மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.