Trending News

சஜின்வாஸ் குணவர்தனவுக்கு உயிர் அச்சுறுத்தல்

(UTVNEWS | COLOMBO) –முன்னாள் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தென்மாகாண மந்திரியொருவர் எனது மனைவியை தொலைபேசியில் அழைத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ என்னைக் கொலை செய்வதாகவும், இரண்டு பிளளைகளையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும் மஹிந்த கூறிதாக, எனது மனைவிக்கு அவர் கூறியுள்ளார்.” என்று சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஸ தரப்பினரின் குறித்த ஆதரங்களை அழமாக யோசித்தே வெளியிடத் தீர்மானித்தேன். என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை. தற்போது தனது பிள்ளைகளுக்கு அச்சுறுத்தல் விடுகின்றனர். ராஜபக்ஸ தரப்பினரின் அரசியல் இதுவா” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாரிடம் ஆதரத்துடம் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

ஊடகவியளர் சந்திப்பின் போது உயிர் அச்சுறுத்தல் விடுத்து தொலைபேசி உரையாடல் பதிவு செய்த இருவெட்டை ஊடகவியலாளருக்கு சஜின்வாஸ் குணவர்தன வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

හැඳුනුම්පත නැති අයට ඡන්දය දෙන්න තාවකාලික හැඳුනුම්පත්

Editor O

அரசியல் தலைமைகளின் ஆளுமையை புடம்போடும் தேசியப்பட்டியல்!

Mohamed Dilsad

New Zealand won toss, bat in first ODI

Mohamed Dilsad

Leave a Comment