(UTV|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை பெயரிடாத நிலையில் கட்சி ஆதரவாளர்களை குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்குமாறு கேட்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று(05) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த மாநாட்டுக்கு தலைமை தாங்கினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய குமார வெல்கம,
“… சந்திரிகா பண்ராநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி காண்பிக்குமாறு தயாசிறி ஜயசேகரவிடம் கேட்டுக் கொள்கிறேன்.
எதிர்வரும் தேர்தலில் எதிர்பார்க்கப்படும் முடிவு கிடைத்தால் தயாசிறி ஜயசேகரவை காதினால் பிடித்து வெளியில் வீசவும் தயார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் எனவும், அதற்காகவே சந்திரிகா குமரதுங்கவை நிகழ்வுக்கு அழைத்தேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தேர்தல் களத்தில் இல்லாததன் காரணமாக 34 பேரை கொண்ட வாக்குச்சீட்டில் எவருக்கும் வாக்களிக்கும் உரிமை தனக்கு உண்டு, அவ்வாறான உரிமை மக்களுக்கும் உள்ளதால் அவர்கள் தனக்கு விருப்பமானவருக்கு வாக்களிக்கலாம் ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க முற்படும் எவருக்கும் வாக்களிக்க வேண்டாம் அவர்களை தவிர வேறு எவருக்கும் வாக்களியுங்கள்..” என அவர் கேட்டுக் கொண்டுள்ளளார்.