(UTV|COLOMBO) – இந்த நாட்டில் எந்த பகுதிக்கு தான் சென்றாலும் அப் பகுதியிலுள்ள பெண்கள் இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தன்னிடம் கேட்பதாக பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று கண்டி கலகெதர பகுதியில் நடைபெற்ற அரசியல் பிரசார கூட்டத்தில் வைத்தே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.