Trending News

‘பியூரா’ (Piura) இலங்கை சலவைக் களத்தில் காலடி

(UTVNEWS | COLOMBO) – ‘ஓக்ஸி ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் மிகவூம் எதிர்பார்க்கப்பட்ட ‘பியூரா’ (Piura) இலங்கை சலவைக் களத்தில் காலடி பதிக்கிறது.

இலங்கையின் போட்டிமிகு சலவைத்துறை சந்தையில் முதன் முதலாக, ஆனால் மிக வலுவாகத் தடம் பாதிக்கிறது ‘பியூரா’ சலவைத் தயாரிப்புகள்.

இது பன்முகப்படுத்தப்பட்ட குடும்ப வர்த்தகக் கூட்டமைப்பான வரையறுக்கப்பட்ட ஓக்ஸி ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) நிறுவனத்தின் கருவில் உருப்பெற்ற ஒரு உன்னதத் தயாரிப்பாகும். இது ஸ்டாண்டர்ட் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் கீழ் சுயாதீனமாய் இயங்கும் ஒரு அங்கமாகத் திகழ்கிறது. ஓக்டோபர் 28ஆம் திகதிஇ கொழும்பு 06 இல் உள்ள புகழ் பெற்ற வட இந்திய உணவகமான சானாவில் (ஊhயயெ’ள) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போதுஇ நிறுவனத்தின் தொழில்சார் வலிமை மற்றும் திறன்களின் எதிரொலியூடன் ‘பியூரா’ மிகவூம் கோலாகலமான முறையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போதுஇ ‘ஓக்ஸி ஹோல்டிங்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. இக்பால் வலிமொஹாமட்இ பிரதம நிறைவேற்று அதிகாரி வலி மொஹாமட் இக்பால்இ பிரதம நிறைவேற்று இயக்குனர் அத்னான் இக்பால்இ பிரதம நிதிவள அதிகாரி இக்ரம் பைஸ் மற்றும் தலைமை முகாமையாளர் நவஃல் நூர்தீன் போன்றௌர் நிறுவனத்தின் தலைமை மற்றும் முகாமைத்துவம் சார்பில் பங்கேற்றிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் சந்தைப்படுத்துதல் துறையில் மிகுந்த அனுபவம் மிக்க திரு. நுவன் விமலனஇ அவருடன் வரையறுக்கப்பட்ட வின்கோ (பிரைவேட்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ரொஷானி பெரேரா மற்றும் மேன்மை தங்கிய விருந்தினர்கள்இ ஊடகவியலாளர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

துரித வளர்ச்சி கண்டு வரும் ஓக்ஸி ஹோல்டிங்ஸ்’ குழுமம் அதன் வலுவான கூட்டாண்மை அடித்தளத்தின் துணையூடன் பயணிக்கும் தனது பயணத்தில், சலவைத்துறையிலும் தனது தனித்துவத்தை மேம்படுத்தும் வகையில் தனது செயற்பாட்டை விஸ்தரித்துள்ளது.

ஏற்கனவே பல்வேறுபட்ட தனது ஏனைய தயாரிப்புகளான துணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனக் கலவைகள், உணவூப் பொதியிடல் தயாரிப்புகள் , தகடுகள், சுவரலங்காரத் தாள்கள், வீட்டு அலங்காரம் மற்றும் உட்கட்ட அலங்காரப் பொருட்கள் சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தடம் பதித்துள்ள இந்நிறுவனம் சலவைத்துறையிலும் தனது பெயரைப் பொறித்திருப்பது விசேட அம்சமாகும்.

சமகால வர்த்தக உலகில் பிரபலமான ஒரு சான்றாக விளங்கும் இந்நிறுவனம், ஒருங்கிணைந்தஇ வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டஇ நேர்த்தியான தீர்வூகள் மற்றும் வணிக நிலவரத்தில் நிலையான உத்திகளை கையாள்வதன் ஊடாக, முழு நாட்டுக்கும் உதாரணமாய்த் திகழும் ஆற்றலுடன் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

அதன் அடையாளப்படுத்துதல் மற்றும் செயற்பாட்டு அம்சங்களைப்பற்றி ஓக்ஸி ஹோல்டிங்ஸ் பிரதம நிர்வாக இயக்குனர் திரு. வலிமொஹாமட் இக்பால் கருத்து தெரிவிகையில், “எங்கள் விரிவான தயாரிப்பு வரிசையின் நாம் உள்ளடக்கியூள்ள ‘ஹவூஸ் ஓஃப் டிடர்ஜென்ட்ஸ்’ (House of Detergents) என்ற உற்பத்தி தொனிப்பொருளின் கீழ் சலவை சவர்க்காரம், சலவைத் தூள், கைகள் கழுவப் பயன்படும் Hயனெ றயளா திரவம் முதல் துணிகளுக்கு மென்மையைப் பெற்றுக் கொடுக்கும் வாசனைத் திரவம் (Fabric softner) போன்றவை முல்லேரியாவ தெற்கு பகுதியில் அமைந்துள்ள அதிஉயர் தொழில் நுட்பத்தின் உதவியூடன் இயங்கும் நவீன தொழிலகத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சலவைத்துறையில் நாம் எமது செயற்பாட்டை தொடங்கும் முன்இ உள்ளுhர் சந்தை நிலவரத்தை மதிப்பீடு செய்வதற்கு ஒரு காத்திரமான களநிலை ஆய்வொன்றை மேற்கொண்டோம். ஆனால்இ ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற விரிவான அறிக்கையில், ஆச்சரியப்படும் விதத்தில் 75 சத விகிதமான சலவை உற்பத்திகளில் பன்னாட்டு நிறுவனங்கள் (MNCs) தமது ஆதிக்கத்தை செலுத்துவதைக் காணக்கூடியதாக இருந்தது.

மிகச் சில தேசிய மற்றும் பிராந்திய வர்த்தக அடையாளத்துடனான உற்பத்திகள் முன்னணி வகித்தாலும், ஒரு வித்தியாசமானஇ துடிப்பான போட்டியாளர் களத்தில் குதிக்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அடையாளம் கண்டு கொண்டோம்.

எனவேஇ 48 இருப்பு அலகுகள் (SKU’s) மற்றும் ஒரு திறன் மிக்க தொழில்சார் அணியின் உயர்ந்த செயலாற்றலுடன் எமது செயல்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் வெற்றியை அடையலாம் என்ற உறுதியூடனும், (Piura) சலவை உற்பத்திகள் எந்த ஒரு விற்பனை ஸ்தாபனத்திலும் முன்னுதாரணத்துக்கான ஒரு மாற்றமாக அமையூம் என்பதை நாம் மிக உறுதியூடன் கூறிக்கொள்ள விரும்புகிறௌம்.” என்றார்.

மூன்று தசாப்த கால பல் துறை சிறப்புகளுடன் கூடிய பெருநிறுவனத்துறை அனுபவம் மிக்கவரானஇ நிறுவனத்தின் தலைமை முகாமையாளர் திரு. நவ்ஃல் நூர்டீன் அவர்கள், ஒரு முழுமையான மற்றும் விரிவான கண்ணோட்டத்துடன் புதிதாக தொடங்கப்பட்ட ஒரு துணிச்சல் மிகுந்த உற்பத்தி செயல்முறை பற்றி கருத்துத் தெரிவிக்கையில்இ சவால்களை ஆய்வாகவூம், அபாயத்தை வெகுமதியாகவூம் மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கான முகாமைத் திறன் மற்றும் உள்ளுhர் விநியோக மூலோபாய வலையமைப்பு போன்றவற்றைக் கோடிட்டுக் காட்டுகிறது என்று கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பியூரா” சலவை உற்பத்திகள் என்பது அதி உயர்ந்த தரத்தில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுஇ மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான அடையாளத்தைக் கொண்ட உற்பத்தியாகும். இலங்கையில் மிகவூம் நம்பகரமான மற்றும் ‘மனதிலே பதிந்து நிற்கும்’ சலவைப் பொருள் உற்பத்தியாளராக மாறுவதே எமது பிரதான நோக்கமாகும்.

நித்தம் மாறுதலை சந்திக்கும் சந்தை தேவைகளைப் பூர்த்தி செய்யூம் வகையிலும் வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்யூம் வகையிலும் எமது தயாரிப்புகளை வடிவமைப்பதன் மூலம் நட்புரீதியான போட்டியை விரிவாக்கம் செய்யூம் பொருட்டு அதற்கான முயற்சியில் எல்லை தாண்டிய நடவடிக்கைகளில் ஈடுபடவூம் நாங்கள் மிக ஆவலோடு இருக்கிறௌம். எங்கள் வலுவான விநியோக வலையமைப்பின் ஊடாக ‘பியூரா’ உற்பத்திகள் நாடு முழுவதும் கிடைக்க வழி செய்துள்ளோம்.

பொது வர்த்தகம் (சில்லறை விற்பனை)இ நவீன வர்த்தகம் (பல்பொருள் அங்காடிகள் மற்றும் அதிஉயர் அங்காடிகள் (Hyper Markets) முதல் ‘ஹோரேகா’(Hotels, Restaurants, Cafes) எனப்படும் ஹோட்டல்கள்இ உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வரை அனைத்து சந்தைகளையூம் நாம் உள்ளடக்க ஆவலாயூள்ளோம்.

மேலும், தனிநபர் பராமரிப்புத் துறையில் காலூன்றுவதற்கான வாய்ப்பைத் தீர்மானிக்க ஒரு முன்னோடித் திட்டத்தையூம் நடத்தி வருகிறௌம். முக்கியமாகஇ அநேகமாக மறக்கப்பட்டு விட்ட குழந்தை பராமரிப்பு உற்பத்திகள் அடுத்த சில மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்,’

கூட்டாண்மை, சமூக பொறுப்பு, சமத்துவம் மற்றும் ஒத்திசைவூ ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, ‘ஓக்ஸி ஹோல்டிங்ஸ்’ நிறுவனம்இ மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளது.

இது நிர்வாக இயக்குனர் இக்பால் வலி மொஹமட் அவர்களின் உயர்ந்த சமூக சிந்தனையைக் காட்டுகிறது. இதன் முன்னோடியாகஇ இந்த முதலீட்டாளர்களின் இலக்கான நிறுவனம் (Blue Chip Company), தனது தொழிலகத்தில் நடுநிலைமையை பேணுகிறது. இன, மத, மற்றும் மொழி வேறுபாடுகள் அற்றதும்,பக்கச்சார்பற்ற முறையிலும் தொழில் மற்றும் பதவி நிலைகளை வழங்குதல் இந்த நிறுவனத்தின் சிறப்பம்சமாகும்.

Related posts

14 ஆம் திகதிக்கு முன்னர் புதிய அமைச்சரவை நியமனம்-அமைச்சர் ராஜித

Mohamed Dilsad

முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி

Mohamed Dilsad

Sri Lanka, Pakistan ink MoU to expand bilateral cooperation in skill development

Mohamed Dilsad

Leave a Comment