(UTV|COLOMBO) – பர்கினோ பசோ நாட்டின் தங்கச்சுரங்க ஊழியர்கள் மீது மர்மநபர்கள் நடத்திய தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான பர்கினோ பசோ நாட்டின் போன்கியுவ் என்ற இடத்தில் கனடா நாட்டின் நிறுவனத்திற்கு சொந்தமான தங்கச்சுரங்கம் அமைந்துள்ளது.
அந்த தங்கச்சுரங்கத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சென்ற பேரூந்திற்கு மர்ம நபர்கள் சிலர் பேரூந்துகளை குறிவைத்து துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த தாக்குதலில் தங்கச்சுரங்க ஊழியர்கள் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.