(UTV|COLOMBO) – ஜேர்மன் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா (LUFTHANSA) இருண்டு நாட்களாக சுமார் 1300 விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
லுஃப்தான்சா ஊழியர்கள் தமது சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாகவே இவ்வாறு விமானங்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இவர்களின் கோரிக்கைக்கு ஜேர்மன் அரசாங்கமும் இணக்கம் தெரிவிக்க மறுத்து விட்டது. இந்நிலையிலேயே அவர்கள் நேற்று(07) 700 விமானங்களையும், இன்று(08) 600 விமானங்களையும் இரத்து செய்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த இரண்டு நாள் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் 180,000 பயணிகளை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.