(UTV|COLOMBO) – இலங்கை மின்சார சபையின் நட்டம் இந்த ஆண்டு 89 பில்லியன் ரூபாவாகுமெனவும், நாட்டுக்கே ஒளி தரும் மின்சார சபையை இருளில் இருந்து மீட்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “விதுலி புராணய” நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
மின்சார சபையில் ஏற்பட்டிருக்கும் இந்த பாரிய நெருக்கடி குறித்த பொறுப்பில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு விலகிக் கொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.