Trending News

தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) – ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டைகளை விநியோகிக்கும் கால எல்லை நாளை மறுதினம் (12) வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் விநியோகக் காலத்தை நீடிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், முதியவர்களுக்கான அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மதகுருமார்களுக்கான அடையாள அட்டை ஆகிய ஏற்றுக்கொள்ளப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாதோருக்காக இந்தத் தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கப்படுகின்றது.

Related posts

රුසියානු හමුදාවට එක් වූ, ශ්‍රී ලාංකිකයින් 59ක් ජීවිතක්ෂයට

Editor O

Bus fares to be increased by 6.28%: Minimum Rs. 10

Mohamed Dilsad

மண்சரிவு அபாய எச்சரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment