(UTV|COLOMBO)- எதிர்வரும் 16ம் திகதி வாக்களிக்கவரும் முஸ்லிம் பெண்கள் முகத்தினை மறைக்கும் விதத்தில் அணியும் புர்கா மற்றும் நிகாப் ஆடைகளுடன் வாக்களிப்பு நிலையத்திற்கு வருவதை தேர்தல்கள் ஆணைக்குழு தடை செய்துள்ளது.
அத்துடன் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் தமது முகத்தை தெளிவாக தெரியும் விதமாக ஆடை அணிந்திருத்தல் வேண்டும் எனவும் குறித்த ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.