(UTV|COLOMBO) – பங்களாதேஷ் மற்றும் இந்தியாவைத் தாக்கிய புல்புல் சூறாவளியில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதோடு மீனவர்கள் 05 பேர் எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பங்களாதேஷிலும் இந்தியாவிலும் துறைமுகங்களும் விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. சூறாவளியையொட்டி படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பங்களாதேஷின் தென்மேற்குக் கடற்கரைக்கு அப்பாலுள்ள சென். மார்டின் தீவில் சுமார் 1,500 சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாது சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷில் இந்த சூறாவளியால் தாழ்வான கரையோர பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 2.1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அதேசமயம் இந்தியாவில் சுமார் 120,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.