(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.
இதனை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் பிரதிநித்துப்படுத்தும் கட்சிகளின் சுவரொட்டிகள் , பதாதைகள் என்பனவும் இன்றை தினம் அகற்றப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் ஹோமாகம பகுதியிலும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் இறுதி பிரசாரக் கூட்டம், மஹரகமவில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.