(UTV|COLOMBO)- எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 35 ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் இடையில் இன்று(14) முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தலைமையில் இன்று காலை10.30 மணிக்கு கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் எவ்வாறான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பில் இங்கு தௌிவுபடுத்தப்படவுள்ளது.