Trending News

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 284 கைதிகள் விடுதலை

(UTV|COLOMBO)  – சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 284 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜே.டபிள்யூ.தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கொலை, கொள்ளை, பெண்கள் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட 40 குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 284 கைதிகளே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.

இந்த கைதிகள் குறித்த விபரங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதி கிடைத்தவுடன் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவித்த கப்பல்…

Mohamed Dilsad

முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

Mohamed Dilsad

100 பேரில் 99 பேர் ரணில் இருந்தது போதும்

Mohamed Dilsad

Leave a Comment