(UTV|COLOMBO) – ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை முழுவதும் 2200 க்கும் அதிகமான கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
அதற்கு மேலதிகமாக நடமாடும் கண்காணிப்பு பணிகளும் இடம்பெறுவதாக கெபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் மற்றும் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்கள் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டிற்கு வருகை தந்துள்ள 17 வௌிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.