Trending News

நீர் விநியோகத் தடை வழமைக்கு

(UTV|COLOMBO) – கொழும்பின் பல பகுதிகளில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் இன்று(19) பிற்பகல் வேளைக்குள் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்லேயிலிருந்து மாளிகாகந்த வரை நீரை விநியோகிக்கும் பிரதான நீர்க்குழாயில் கசிவு ஏற்பட்டமை காரணமாக நேற்று(18) முதல் கோட்டை, புறக்கோட்டை, சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை மற்றும் டி ஆர் விஜேவர்தன மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கசிவு ஏற்பட்டுள்ள குழாயில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி

Mohamed Dilsad

ஏ.ஆர்.ரகுமானை ஈர்த்த அந்த காந்தக்குரல்

Mohamed Dilsad

Angry protests greet Qatar emir in London

Mohamed Dilsad

Leave a Comment