Trending News

கர்த்தர்பூர் நடைபாதை

(UTV|COLOMBO) – பாகிஸ்தான் அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நிலமாகும். அங்கு அனைத்து மதங்களையும் பின்பற்றுபவர்கள் தங்கள் மதங்களை மிகவும் சுதந்திரமாக பின்பற்ற முடியும். சீக்கிய சமூகம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அமைதியுடனும், நட்புடனும் வாழ்ந்து வருகிறது. அவர்களின் குர்த்வாராக்கள் பல நூற்றாண்டுகளாக நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகின்றன. அவற்றின் பராமரிப்பிற்கான பொறுப்பை பாகிஸ்தான் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் குர்த்வாரா தர்பார் சாஹிப்,கர்தார்பூர் ஆனது, இந்திய குர்தாஸ்பூர் எல்லைக்கு அருகில் , லாகூரிலிருந்து 120 கி.மீ தொலைவில், பாகிஸ்தான் நரோவால் மாவட்டம் தெஹ்ஸில் ஷாகர்கரில் அமைந்துள்ளது. இதற்கும் , பாபா குரு நானக்கிற்கும் இடையிலான தொடர்பு, ஒரு சிறந்த மத மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

சீக்கியர்களின் மிகவும் புனிதமான ஆலயங்களில் குர்த்வாராகும் ஒன்றாகும். உண்மையில், குரு நானக் தேவ் ஜி தனது வாழ்க்கையின் கடைசி பதினெட்டு ஆண்டுகளைக் கழித்தது மற்றுமின்றி அவரைப் பின்பற்றுபவர்களை உருவாக்கிய இந்த மத மையத்திலிருந்தான் சீக்கிய மதம் வெளிப்பட்டது. ஆன்மீக வழிகாட்டப்பட்ட சீடர்களின் மூலம் குரு அங்கத் தேவ் தனது செய்தியை தொலைதூரமாக பரப்பி இப்புதிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு தனி அடையாளத்தை வடிவமைத்துக்கொடுத்தார். மேலும், குரு நானக் தேவ் ஜி முஸ்லிம்களாலும் சீக்கியர்களாலும் போற்றப்பட்டார் ஆவார் .

நடைபாதையின் முன்னோடி

பிரதமர் இம்ரான் கான் 2018 நவம்பர் 28ம் திகதியன்று கர்த்தார்பூர் நடைபாதையின் ஆரம்ப கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தார் . இந்த நடைபாதை பாகிஸ்தான் நரோவால் மாவட்ட, கர்தார்பூர் பகுதியில் உள்ள
குர்த்வாரா தர்பார் சாஹிப்பை இந்தியாவின் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தேரா பாபா நானக் உடன் இணைக்கும். இந்திய எல்லையிலிருந்து கர்தார்பூரில் உள்ள குர்த்வாரா தர்பார் சாஹிப் வரை நடைபாதையை பாகிஸ்தான் கட்டி
வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நடைபாதையைத் திறப்பதற்கான முயற்சி பாகிஸ்தான் அரசாங்கத்தால் நானக் நாம் லெவாஸ் மற்றும் குறிப்பாக உலகெங்கிலும் உள்ள சீக்கிய சமூகத்தின் நீண்டகால கோரிக்கையை
நிறைவேற்றுவதற்காக எடுக்கப்பட்டதாகும் .

இந்த விழாவில் அப்போதைய இந்திய உள்ளாட்சி, சுற்றுலா, கலாச்சார விவகாரங்கள் மற்றும் அருங்காட்சியக அமைச்சராக இருந்த திரு.நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அப்போதைய உணவு அமைச்சராக இருந்த ஹரிசிம்ரத் கவுர் பாடல் ஆகியோர் கலந்து கொண்டனர். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான மக்களும், இரு நாடுகளின் ஊடகவியலாளர்களும் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள் / இராஜதந்திரிகள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

திட்டத்தின் சுருக்கமான விவரங்கள்

1500 ஏக்கர் பரப்பளவில் இந்த திட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, எல்லையில் குடிவரவு முனையத்தை உருவாக்குதல், எல்லையை கடக்கும் இடத்தில் உள்ள ரவி என்ற ஆற்றின் மீது பாலம் அமைத்தல், குர்த்வாராவின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல், யாத்திரியர்களுக்கு தேவையான வசதிகளை புனரமைத்தல் ஆகியவை அடங்கும். மேலும்,குர்த்வாரா கர்த்தார்பூர் சாஹிப் கட்டிடத்தை வடிவமைக்கும் போது சீக்கிய சமூகத்தின் மத நம்பிக்கைகள் மற்றும்

வழக்கமான சீக்கிய கட்டிட வடிவமைப்புக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தின் போது, இப்போது நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்காக வரவிருக்கும் பத்தாயிரம் யாத்திகர்களுக்காக கட்டப்பட்டிருக்கும் தற்காலிக குடியிருப்பு வசதிகளை தவிர மேலதிக ஹோட்டல்களும் விடுதிகளும் கட்டப்பட இருக்கிறது. யாத்திகர்களின்
போக்குவரத்தை எளிதாக்க எல்லை முடியுமிடம் வரை 500 மீட்டர் கொண்ட சாலையை அமைப்பதும் இதில் அடங்கும்.
எல்லையில் உள்ள குடியேற்றம் முடியுமிடத்தில் மருத்துவ மற்றும் பிற தேவையான வசதிகள் மட்டுமல்லாமல், விசாலமான வாகன நிறுத்துமிட வசதியும் காணப்படும். பாகிஸ்தான் நாட்டுக்கு உள்ளே வருவதற்கு அனுமதி பெற்ற பிறகு, குர்த்வாராவுக்கு அருகாமையில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்திற்கு பேருந்துகள் மூலம் யாத்திரிகர்கள் கொண்டு
செல்லப்படுவார்கள். இதற்காக 6.8 கி.மீ சாலை மற்றும் ரவி ஆற்றின் மீது 800 மீற்றர் நீளமுள்ள பாலமும் கட்டப்பட்டுள்ளது. யாத்திரிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதையில் பாதுகாப்பு மையங்கள் நிறுவப்பட உள்ளது .

வாகன நிறுத்துமிடத்தை அடைந்த பிறகு, பாகிஸ்தான் நாட்டுக்கு உள்ளே வருவதற்கு அனுமதி வைத்திருப்பவர்கள், பயோ மெட்ரிக் (Bio Metric ) பதிவுக்குப் பிறகு குர்த்வாராவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். மேலும், புனித வளாகத்திற்குள் தங்கள் மத சடங்குகளை சுதந்திரமாக நிறைவேற்றவும் அனுமதிவழங்கப்படுவார்கள்.

புனிதத்தலத்திக்கு அருகிலுள்ள பழமையான கட்டமைப்புக்களை நவீன முறையில் புனரமைத்தல்,குர்த்வாரா வளாகங்களின் திட்டமிடப்பட்ட புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கம் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும். புதிய கட்டிடங்கள் யாத்திரிகர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில்
வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பொது சமையலறை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நூலகம் ஆகியவை அடங்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல்

நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்திய யாத்திரியர்கள், குர்த்வாரா கர்த்தார்பூர் சாஹிப்பைப் பார்வையிட கர்தார்பூர் நடைபாதையை திறக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானும் இந்தியாவும் 24 அக்டோபர் 2019 அன்று கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தத்தினால் தினசரி 5,000 யாத்திரியர்கள்
குழுக்கலாகவோ அல்லது தனியாகவோ , கால்நடையாகவோ அல்லது பஸ்ஸிலோ குர்த்வாரா கர்த்தார்பூர் சாஹிப்பைப் எந்நேரத்திலும் தரிசிக்க முடியும்.மேலும் சீக்கிய யாத்திரியர்களின் எண்ணிக்கை விசேட சந்தர்ப்பங்களின் போது இன்னும் அதிகரிக்கப்பட இருக்கிறது . யாத்திரியர்கள் உரிய ஆவணங்ளை சமர்பிப்பதன் மூலம் கர்த்தார்பூர் சாஹிப்பைப் தரிசிக்க
முடியும்.

பாபா குரு நானக் பல்கலைக்கழகம்

பிரதமர் இம்ரான் கான் 2019 அக்டோபர் 28ம் திகதியன்று பஞ்சாப் மாகாணத்தின் நங்கனா சாஹிப்பில் பாபா குரு நானக் பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது பஞ்சாபி மற்றும் கல்சா மொழிகளில் கூடிய ஈடுபாடு கொள்ளும் முதல் பல்கலைக்கழகமாகும். மேலும் இப்பல்கலைக்கழகமானது பாபா குரு நானக்கின் வாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளிலும் ஈடுபடும் . பாகிஸ்தான் மற்றும்
வெளிநாடுகளில் உள்ள சீக்கிய சமூகத்திற்கான சமூக மையமாக பணியாற்றுவதோடு, நாட்டில் மத சுற்றுலாவை மேம்படுத்தவும் இப்பல்கலைக்கழகம் செயல்படும்.

நினைவு நாணயம், முத்திரை மற்றும் பாடல் கர்த்தார்பூர் நடைபாதை திறப்பைக் குறிக்கும் வகையில், குர்த்வாரா
கர்த்தார்பூர் சாஹிப்பிற்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கான நினைவு தபால் முத்திரை மற்றும் நாணயத்தை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. மேலும், சீக்கிய யாத்திரிகர்களை வரவேற்கும் வகையில் பாகிஸ்தான் அரசு
உத்தியோகபூர்வ பாடலையும் வெளியிட்டுள்ளது.

நடைபாதை திறப்பு

பாகிஸ்தான் பிரதம மந்திரி இம்ரான் கான் 2019 நவம்பர் 9ம் திகதியன்று கர்த்தார்பூர் நடைபாதையைத் திறக்கவுள்ளார். பிராந்தியத்திற்கு இடையிலான அமைதியைக கட்டியெழுப்பும் நடவடிக்கையாகவும், ஒற்றுமையை மேன்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்ட இந்த மைல்கல் திட்டமானது , சீக்கிய சமூகத்திற்கான பரிசாக, பாகிஸ்தானால் முழுமையாக நிதியளிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மேலும் பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ணத்தின் சைகையாக, நடைபாதை திறக்கும் நாளிலும், பாபா குரு நானக்கின் 550 வது பிறந்தநாளிலும் பாகிஸ்தானுக்கு வருகை தரும் யாத்திரிகர்களுக்கான கடவுச்சீட்டு மற்றும் கட்டணம் போன்றவற்றை தள்ளுபடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


(இன்திசார் அஹ்மத் சுலேஹ்ரி – எழுத்தாளர் கொழும்பின் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் ஒரு பத்திரிகையாளர் ஆவார்).

Related posts

தேசிய சுற்றுலா தொழிலாளர்கள் சங்கம் கோப் குழுவில் முறைப்பாடு

Mohamed Dilsad

பெண் அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

Mohamed Dilsad

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் கிரன் பவல்!

Mohamed Dilsad

Leave a Comment