Trending News

பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் சபாநாயகர் அறிக்கை

(UTV|COLOMBO) – புதிய ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னர் பாராளுமன்றத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் உட்பட ஏனைய கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் சபாநாயருடன் கலந்துரையாடியதாக சபாநாயகர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது மூன்று தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1. அரசியலமைப்பின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து, ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு இடமளித்தல்.

2. பாராளுமன்று உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 3/2 பெரும்பான்மையை பெற்று பாராளுமன்றத்தை கலைத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்துதல்.

3. பிரதமர் தலைமையிலான அரசாங்கம் சுய விருப்பத்துடன் பதவி விலகி, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் புதிய அமைச்சரவையை அமைக்க இடமளித்தல்.

குறித்த விடயங்கள் தொடர்பில், இந்த வாரத்திற்குள் கட்சித் தலைவர்கள் கூடி இறுதி தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி, சபாநாயகருக்கு அறிவித்த உடனே, இறுதித் தீர்மானத்தை எடுப்பதாக பாராளுமன்றத்தின் அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டவுள்ளார்.

Related posts

“I am the Floyd Mayweather in MMA” – Khabib Nurmagomedov

Mohamed Dilsad

President arrives in London to participate in CHOGM

Mohamed Dilsad

Commonwealth Secretary-General arrives in Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment