(UTV|COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற சகல அமைச்சர்களும் தங்களுடைய பதவிகளை இராஜினாமா செய்து விட்டு புதிதாக ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த நாட்டை வழிநடத்தி செல்லகூடிய வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அஸ்கிரி மகா பீடத்தின் பதிவாளர் மதகம தம்மானந்த தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அஸ்கிரி மகா பீடத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.