(UTV|COLOMBO) – இன்று(20) நள்ளிரவிலிருந்து 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் பேச்சுவார்த்தையின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.