(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான கல்வி பொது சாதாரண தர பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இம்முறை 717,008 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் புஜித்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, 4,987 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளதுடன், 554 இணைப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இரத்மலானை, தங்காலை, மாத்தறை. சிலாபம், கொழும்பு மெகசின் சிறைச்சாலை, மகரகம அபேக்ஷா வைத்தியசாலை, வடரெக சனித்தா வித்தியாலயம், நேபாளம் காத்மண்டு நகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் ஆகிய இடங்களில் விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.