(UTV|COLOMBO) – கடந்த ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணையை நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றுக் கொண்ட பின்னர், கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகையை நேற்று(21) மாலை முதற்தடவையாக சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
இதன்போது, உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் தண்டனை வழங்கும்படி கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையிலேயே, ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து உரிய விசாரணையை நடத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார்.