(UTV|COLOMBO) – இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு, ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை முறியடிப்பு ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளுக்கு அந்நாட்டின் சட்ட மா அதிபரால் உட்படுத்தப்பட்டுள்ளார்.
மூன்று வெவ்வேறு வழக்குகளின் கீழ் இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செல்வந்தர்களிடம் இருந்து பரிசில்களை பெற்றுக் கொண்டமை மற்றும் ஊடகங்களில் சாதகமான செய்திகளை வெளியிட்டுக் கொள்வதற்காக பணம் செலுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த குற்றச்சாட்டுகள், ஆட்சிக் கவிழ்ப்புக்கான சூழ்ச்சி என்று பிரதமர் நெத்தன்யாஹு குற்றம் சுமத்தியுள்ளதோடு, குறித்த இந்த குற்றச்சாட்டுகளால் தாம் பதவி விலகப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.