(UTV|COLOMBO) – 2019 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு செயல்முறை மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்ட கொரிய மொழி தேர்ச்சி பரீட்சையின் இறுதி பெறுபேறுகள் இன்று(22) வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.slbfe.lk என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிட்சை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமானதுடன் ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரையில் தயாரிப்பு நிர்மாணத்துறை மற்றும் கடல் தொழில் ஆகிய துறைகளின் கீழ் கணினி அடிப்படையில் (Online) நடைபெற்றது.
குறித்த பரீட்சைக்கு 3,319 பரீட்சைத்திகள் தோற்றியிருந்ததுடன், இவர்களுள் 2,411 பேர் சித்தி அடைந்தனர்.
இலங்கை அரசாங்கம் மற்றும் கொரிய அரசாங்கத்திற்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக இந்த தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பம் இலங்கையர்களுக்கு கிடைத்துள்ளது.