(UTVNEWS | COLOMBO) – சிலியில் கடந்த 5 வாரங்களாக தொடரும் கலவரங்களினால் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிதறிய குண்டுகளின் துகள்கள் பட்டதில் 280 பேரின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் குறிப்பிட்ட சில குடும்பத்தினர் மட்டும் வசதியான வாழ்க்கை வாழ்வதாகவும், அனைவருக்கும் சமூக, பொருளாதார நிலையில் சமநிலை இல்லை என்று தெரிவித்து ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது மக்கள் போராட்டத்தில் கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என சிலி நாட்டின் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா கோரிக்கை விடுத்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.