(UTV|COLOMBO) – கேரள கஞ்சா 1 கிலோ 600 கிராமுடன் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் அங்கொட லொக்காவின் சகாக்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
முல்லேரியாவில் உள்ள அம்பதலே பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.