(UTV|COLOMBO) -பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான கஞ்சிப்பானை இம்ரான் என்றழைக்கப்படும் மொஹமட் நஜீம் மொஹமட் இம்ரான் எதிர்வரும் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மரண அச்சுறுத்தல் விடுத்தல், கப்பம் பெற்றல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் இன்று கொழும்பு மேலதிக நீதிபதி லோசனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.