(UTV|COLOMBO) -ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியாவுக்கு சற்றுமுன்னர் பயணமானார்.
————————————————————————————- (UPDATE)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாள் அரச விஜயம் மேற்கொண்டு இன்று (28) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்தித்து, இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் ஜெனரல் மொஹான் சமரநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியுடன் ஐவரடங்கிய குழுவொன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்த, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, திறைசேரியின் செயலாளர் சஜித் ஆட்டிகல, ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.