(UTV|COLOMBO) – இம்முறை க.பொ.த. சாதாரணதர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களில் இதுவரையில் தேசிய அடையாள அட்டை கிடைக்காதவர்கள் ஆட்பதிவு திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 011 522 6125 அல்லது 011 522 6126 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் தங்களது அடையாள அட்டை பற்றிய விபரங்களை அறிந்து கொள்ள முடியுமென, ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ம் திகதி முதல் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.