(UTV|COLOMBO) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்கவிதிகளை மீறி செயற்பட்ட அனைவருக்கும் எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என குறித்த கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸமன் பியதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.