(UTV|COLOMBO) – இந்தியாவிற்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
பின்னர் இது தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையில் உளவுத்துறையை மேலும் வலுப்படுத்த மோடி அரசாங்கம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
மேலும்,
01.புலனாய்வு கட்டமைப்பை வலுப்படுத்த இந்தியா 50 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
02. நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இந்தியா 400 மில்லியன் டொலர்களை (சலுகைக் கடன்) வழங்கவுள்ளது.