(UTVNEWS | COLOMBO) – புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இடம்பெற்ற மற்றும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சில சம்பவங்கள் இனியும் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்ற நிலையைத் தோற்றுவிப்பதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரி கடத்தப்பட்டமை, பக்கச்சார்பற்றதும் நேர்மையானதுமான அதிகாரிகளை அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்குதல், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகநிறுவனங்களுக்கு வரையறைகளை விதித்தல் மற்றும் எதிராளிகளைப் பழிவாங்குதல் ஆகியவை 2015 இற்கு முன்னரான இருண்ட யுகத்தை நினைவுபடுத்துகின்றது என்று சஜித் பிரேமதாஸ விசனம் வெளியிட்டிருக்கிறார்.