(UTVNEWS | COLOMBO) – தமது இராஜினாமா கடிதங்களை ஒப்படைக்குமாறு கூட்டுத்தாபனங்கள், சபைகளின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுநிரூபம் ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச நிறுவனங்களுக்கு திறமையும் தகைமையும் உள்ளவர்களை நியமிப்பது தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதியினால் ஆறு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.