(UTV|COLOMBO) – பாராளுமன்ற கூட்டத்தொடரை நிறைவு செய்வதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 70 வது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைலாக நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுகின்றது என்பதையும், பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரின் ஆரம்பம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.