Trending News

முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவை விடுதலை செய்யுமாறு உத்தரவு

(UTV|COLOMBO) – முன்னாள் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(03) உத்தரவிட்டுள்ளது.

பிரியங்கர ஜயரத்ன விமான சேவைகள் அமைச்சராக பதவி வகித்த போது, சட்ட ரீதியற்ற முறையில் விமான சேவைகள் அபிவிருத்தி திட்டங்களுக்கான அபிவிருத்தி அதிகாரி என்ற புதிய பதவிக்கு அமைச்சரின் தனிப்பட்ட செயலாளரை நியமிப்பதற்கு விமான சேவைகள் பணிப்பாளர் சபையை ஊக்குவித்த குற்றச்சாட்டில் அமைச்சருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்…

Mohamed Dilsad

වර්ෂාවෙන් සහ ජල ගැලීම්වලින් හානි වූ වගා, නැවත ඇරඹීමට රජයෙන් සහාය.

Editor O

Malaysian High Court rejects application on Sri Lankan Envoy

Mohamed Dilsad

Leave a Comment