(UTV|COLOMBO) – பாகிஸ்தானிற்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் விடுத்த அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாட் மஹ்மூத் குரைஸி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று(02) அலரி மாளிகையில் சந்தித்த போது இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.