Trending News

பாதங்கள் மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க சில வழிமுறைகள்

(UTV|COLOMBO) – பாதங்கள் மென்மையாகவும் அழகாகவும் வைத்திருக்க சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது.

குதிகால் வெடிப்பு என்பது சிலருக்கு மழைக்காலங்களில் மட்டும் இல்லாமல் எல்லா நேரங்களிலும் இருப்பதை பார்க்க முடிகிறது.

குதிகால் வெடிப்பு என்பது தாங்க முடியாத கடுமையான வலியை ஏற்படுத்தும், நடப்பதில் சிரமத்தை கொடுக்கும், சிலருக்கு இரத்தம் வருவதும் உண்டு. பாதங்கள் மென்மையாக என்றும் அழகாக இருக்க சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது ஆகும்.

பாதங்களுக்கு மேல் உள்ள இறந்த செல்களை நீக்குவதற்கு எளிய முறை ஸ்கரப் பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்-
1 ஸ்பூன் சர்க்கரை
கொஞ்சம் சோப் ஆயில்
தேங்காய் எண்ணெய்

செய்முறை –
மேல் குறிப்பிட்ட மூன்றையும் ஒரு கிண்ணத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதை பாதங்களில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்ய வேண்டும் பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை கழுவ நன்கு பயனளிக்கும்.

# நீர் சிகிச்சை: தேவையான பொருட்கள்: வெதுவெதுப்பான நீர், கல்லுப்பு, சோப் ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெய்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் சோப் ஆயில் மற்றும் கல்லுப்பு ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து அதில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகாலைத் தேய்க்க கால்களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி விடும்.

பிறகு தேங்காய் எண்ணெய் கொண்டு தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர பாதங்கள் மிருதுவாகும்.

Related posts

Range Bandara claims he was offered USD 2.8 million to cross over

Mohamed Dilsad

Singapore GP: Sebastian Vettel beats team-mate Charles Leclerc

Mohamed Dilsad

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment