(UTV|COLOMBO) – எல்ல – வெல்லவாய வீதி ஆபத்தானதாக இருப்பதனால் அங்கு மலையில் இருந்து கற்கள் உருண்டு விழக்கூடிய அபாயம் நிலவுகிறது.
இந்நிலையில், குறித்த வீதியினை பயன்படுத்தும் மக்கள் அவதானமாக செயற்படுமாறு இடர்காப்பு முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களுக்காக விடுக்கப்பட்ட காலநிலை எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உல்கிட்டிய நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறகப்பட்டுள்ளமையினால் ஹிராதுகோட்டே ரன்கதி வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடவலவை நீர்தேகத்தின் சகல வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.