(UTV|COLOMBO) – 2020ம் கல்வி ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள பாடசாலை புத்தகங்களை, பாடசாலை ஆரம்பிக்கும் முதலாவது தினத்திலேயே மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வி வெளியீட்டு திணைக்கள ஆணையாளர் நாயகம் திஸ்ஸ ஹேவவிதான பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
1,500 மாணவர்களுக்கு அதிகமாக கல்வி கற்கும் பாடசாலைகளுக்கு தற்போது, நேரடியாக பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏனைய அனைத்து பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் வலயக் கல்வி பணிமனைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள வேண்டுமாயின், 011 2 784 815 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.