(UTV|COLOMBO) – மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவையின் காரணமாக உள்ளுர் தொழில்துறைகளைப் போன்று நிர்மாண தொழில்துறைக்கும் தேவையான மூலப்பொருட்களை விநியோகிப்பதில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக அமைச்சரவை அங்கத்தவர்கள் பலரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு மணல், மண் மற்றும் களிமண் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றிச்செல்வதற்காக தற்பொழுது நடைமுறையில் உள்ள அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் தேவை உடனடியாக அமுலுக்கு வருவதை நீக்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.