(UTV|COLOMBO) – இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் பதவியை மிக்கி ஆத்தர் இன்று(05) பொறுப்பேற்றுக் கொண்டார்.
தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளின் முன்னாள் பயிற்றுநரான மிக்கி ஆத்தரை இரண்டு வருட ஒப்பந்த அடிப்படையில் பதவியில் அமர்த்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் இணங்கியுள்ளது.
இந்நிலையில் தென் ஆபிரிக்கரான 51 வயதுடைய மிக்கி ஆத்தர் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளதை ஸ்ரீலங்கா கிரிககெட் உத்தியோகபூர்வமாக இன்று(05) அறிவித்துள்ளது.