(UTV|COLOMBO) – 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக நேபாளம் சென்ற இலங்கையின் ஆறு வீரர்கள் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆறு பேரும், நேபாளத்தின் கத்மண்டு, தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஓருவர் தீவிரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேபாளத்தின் மற்றொரு பெரிய நகரமான பொக்காரவில் இருந்த இலங்கை வீரர்கள் மூவருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட அவர்கள் விமானம் மூலம் கத்மண்டு நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனை என்பதால் சிகிச்சை அதிக பணம் செலவிடப்படுவதுடன் அனைத்து செலவுகளையும் விளையாட்டுத்துறை அமைச்சே பொறுப்பேற்றுள்ளது.
இவர்களை உடனடியாக நாட்டுக்கு திருப்பி அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டுள்ள அவர்களை 4 மணித்தியாலயத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணத்தில் அனுப்பிவைப்பது சிக்கலுக்குரிய விடயம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.