(UTV|COLOMBO) – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளின் நிறைவில் 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் 28ஆம் திகதி 9 எதிரிகளில் 7 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த மேன்முறையீடு இன்று(06) உயர் நீதிமன்றில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
எனினும் 5 நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மேன்முறையீடு விசாரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்த இன்றய அமர்வு, மனுவை 2020 மே 19ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.