(UTV|COLOMBO) – பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ குற்றவாளியென அந்நாட்டு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04ம் திகதி பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸாதானிகரம் முன்பாகவிருந்து புலிகள் அமைப்பு ஆதரவாக செயற்பட்டவர்களை கழுத்தறுப்பதாக சைகை மூலம் அச்சுறுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணைகளின் போதே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்கள் அமைதியை பாதுகாப்பது தொடர்பான சட்டத்தை மீறும் வகையில் அவருடைய செயற்பாடு அமைந்திருந்ததன் காரணமாகவே அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 2400 பவுண்ட் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.