Trending News

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு

(UTVNEWS | COLOMBO) – தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் மூன்று நாட்களுக்கு பின் நேற்று வழமைக்கு திரும்பியுள்ளதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 04 ஆம் திகதி இரவு ஒபாட எல்ல பகுதியில்  ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன.

பாதிப்பேற்பட்டிருந்த ரயில் பாதையை சீர்செய்யும் பணிகளில் ரயில் நிலைய ஊழியர்களும் தியத்தலாவ இராணுவத்தினரும் ஈடுப்பட்டு வந்தனர்.

இதனையடுத்து, தற்போது ரயில் பாதை சீரமைக்கப்பட்டுள்ளதுடன், ரயில்கள் வழமைப் போன்று சேவையில் ஈடுபடுவதாக பண்டாரவளை ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

Shaun White wins halfpipes gold in Pyeongchang

Mohamed Dilsad

595 Sub-Inspectors promoted to the rank of IP

Mohamed Dilsad

“Victory for democracy” – ACMC

Mohamed Dilsad

Leave a Comment