(UTVNEWS | COLOMBO) – இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என்றுவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்றிலிருந்து மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில பிரதேசங்கள் போன்று பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 200 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என்றுவளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.