(UTVNEWS | COLOMBO) -நாட்டிலுள்ள 354 ரயில் நிலையங்கள் பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் நேற்று வட்டவல ரயில் நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பசுமை ரயில் நிலையங்களாக அபிவிருத்தி செய்யப்படும் சகல ரயில் நிலையங்களுக்கும் தான் தனிப்பட்ட முறையில் கண்காணிள்ளதாக ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
ரயில் நிலையங்களும் நவீன தொழில்நுட்பத்தைக்கொண்டதாக அபிவிருத்திச் செய்யப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.
இதேபோன்ற ரயில் சேவைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்றுநியமிக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த குழுவின் சிபாரிசுகளுக்கு அமைவாக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்த ரயில் சேவை இராஜாங்க அமைச்சர் சி.பி.ரட்நாயக்க, ரயில் சேவை மூலம் மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கூறினார்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)