(UTVNEWS | COLOMBO) – பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை, தனது முதல் இன்னிங்ஸில் முதலாம் நாள் ஆட்டநேர முடிவின்போது 5 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
காலையில் குறித்த நேரத்துக்கு போட்டி ஆரம்பித்தபோதிலும் மாலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக 69 ஆவது ஓவரில் மத்தியஸ்தர்களினால் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.