(UTVNEWS | COLOMBO) – 13 ஆவது தெற்காசிய போட்டிகளில் பங்கேற்ற இலங்கை வீர வீராங்கனைகள் நேற்று நாட்டை வந்தடைந்தனர்.
இவர்களை வரவேற்பதற்காக விளையாட்டு துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வீர வீராங்கனைகளின் உறவினர்கள் என பலரும் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்த போட்டிகளில் இலங்கை 40 தங்கப்பதக்கங்கள், 83 வௌ்ளி பதக்கங்கள் மற்றும் 128 வெண்கலப் பதங்கங்களை பெற்று மொத்தமாக 251 பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.
இம்முறை தெற்காசிய போட்டிகளில் 568 வீர வீராங்களைகள் பங்கேற்று இருந்தனர்.