(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சிவனொளிபாதமலையை தரிசிக்க செல்லும் பக்தர்களின் வாகனங்களை பொலிஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் பயணிக்கும் வாகனங்களில் போதை பொருட்கள் உள்ளதா என்ற சந்தேகத்தில் சோதனைகள் மேற்கொண்டு வருவதாக ஹட்டன் வலய பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், நாள் தோறும் தியகல, கினிகத்தேனை, ஹட்டன், நோட்டன் மற்றும் மவுசாக்கலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடிகளிலும் மற்றும் பக்தர்கள் வரும் பாதைகளில் திடீர் சோதனை மேற்கொள்ளபடும் என்றும், அவ்வாறு போதைபொருட்கள் வைத்திருப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபடும் எனவும் தெரிவித்துள்ளார்.